இப்போதெல்லாம் எல்லா கேமராவும் அதிக மெகா பிக்ஸல் வசதியோடு உள்ளன. அதிக பட்ச பிக்ஸலில் வைத்தே பெரும்பாலும் படமெடுக்கிறோம். ஆனால் அவற்றை அதே அளவுகளில் உபயோகிப்பது பல சிக்கல்களைத் தருவதால் அளவைக் குறைக்க வேண்டியது அவசியமாகுது. எப்போதும் ஒரிஜனல் கோப்புகளை தனியாக ஒரு ஃபோல்டரில் வைப்பது நல்லது. எப்ப வேணாலும் மீண்டும் தேவைப்படலாம். அதனால் உபயோகிக்கப் போறப் படங்களை பிரதியெடுத்து இன்னொரு ஃபோல்டரில் போட்டுக்கிறது நல்லது.
இதற்கு எத்தனையோ ஃபோட்டோஷாப் மென்பொருட்கள் இருந்தாலும் யூசர் ஃப்ரென்ட்லியா, பல்வேறு தேவைகளுக்கும் பயனாகக் கூடிய ஒன்றாய் இருக்கும் IrfanView 4.28-யை இங்கே போய் டவுன்லோட் செஞ்சு கணினியில் இன்ஸ்டால் பண்ணிடுங்க முதலில்.
இப்போ இர்ஃபான்வ்யூவில் குறிப்பிட்ட படத்தைத் திறந்திடுங்க. images---resize/resample தேர்வு செய்திடுங்க:
*1
திறக்கும் பெட்டியில் வலப்பக்கம் New Size என்பதன் கீழ் நமக்கு தேவையான அளவை செலக்ட் செய்து ok செய்து சேமித்திடலாம்.
*2
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, படங்களின் அளவைக் குறைத்ததும் கொஞ்சமே கொஞ்சம் அதன் ஷார்ப்நெஸை நீங்க அதிகரிக்க வேண்டியிருக்கும். அதையும் இர்ஃபான்வியூவிலேயே செய்திடலாம். படத்தை சேமிக்கும் முன்னரே செய்திடல் நன்று.
*3
No comments:
Post a Comment