12 April, 2012

இதுவரை எத்தனை கிளிக் ?

ஒபன்டா [ opanda ] மென்பொருள் உங்களுக்கு உதவக் கூடியது. இது காமிரா பற்றிய பல விடயங்களைத் (EXIF) தரக்கூடியது. அதில் உங்கள் காமிரா எத்தனை கிளிக் செய்துள்ளது என்பதை உங்களால் கண்டு கொள்ள முடியும். (காமிராவோட பொதுவான சீரியல் இலக்கம், உள்ளக சீரியல் இலக்கம், பாவிக்கப்பட்ட லொன்ஸ் என்பனவற்றையும் கண்டுகொள்ளலாம்.) மென்பொருள் கொண்டு சேமித்த கோப்புகள், மற்றும் சில வகை காமிராக்களின் தரவுகளை இது சில வேளை விட்டுவிடலாம்.























உங்களுக்கு சரியான முழு தகவலும் கிடைக்கவிட்டால் கீழேயுள்ள சுட்டிகள் காட்டும் இடங்களில் முயற்சி செய்யுங்கள். பொதுவாக ஒபன்டா பல காமிராக்களைக் கையாளக் கூடியது.
      ஒபன்டா மென்பொருளைக் கொண்டு தகவல்களை மாற்றவோ அழிக்கவோ முடியும்.


No comments:

Post a Comment